விழுப்புரம் மற்றும் திருப்பதி முன்பதிவு இல்லா விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி வரை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. அதனால் விருப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் மற்றும் திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் காட்பாடி மற்றும் திருப்பதி இடையே செப்டம்பர் பத்தாம் தேதி வரை பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் எனவும் எதிர் வழித்தடத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் திருப்பதி மற்றும் விழுப்புரம் முன்பதிவு இல்லா விரைவு ரயில் திருப்பதி மற்றும் காட்பாடி இடையே செப்டம்பர் பத்தாம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.