பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக எல்ஐசி யில் புதிதாக கன்யாதன் என்ற சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தையின் பெற்றோர் டெபாசிட் செய்யலாம். இந்தப் பாலிசியின் காலம் 25 ஆண்டுகள் எனவும் இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ள குழந்தையின் பெற்றோர் 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியின் காலத்தில் குழந்தையின் தந்தை உயிரிழந்து விட்டால் மீதமுள்ள பிரீமியம் தொகை செலுத்த வேண்டாம். விபத்துகளால் தந்தை உயிரிழக்கும் பட்சத்தில் உடனடியாக குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

விபத்து அல்லாமல் இயற்கை மரணங்களின் காரணமாக உயிரிழக்க நேரிட்டால் குடும்பதாரரின் செலவுக்காக 5 லட்சம் ரூபாய் தொகையும் பாலிசிதாரரின் மகளுக்கு நிதி வசதி அளிக்கும் வகையிலும் பாலிசி முதிர்ச்சி அடையும் வரை ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் குழந்தையின் திருமணத்திற்காக தினமும் 75 ரூபாய் சேமித்தால் குழந்தையின் திருமண வயதின் போது 14.5 லட்சம் தினமும் 151 ரூபாய் சேமித்தால் 31 லட்சமும் திருமண செலவுக்காக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.