நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், அதன் தாக்கம் தமிழகத்தில் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விநாயகத்திற்கு ரூ.35 லட்சம் சம்பளம் தரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அந்த தகவல் எல்லாம் பொய் எனக் கூறினார். மேலும், தான் கேட்டதை விட 3 மடங்கு அதிக சம்பளத்தை பட நிறுவனம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.