நெல்லை மண்ணில் கர்ஜித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரஸை ஸ்டாலின் சார் தன் பையில் போட்டுக்கொண்டார்” என மிக நேரடியான குற்றச்சாட்டை முன்வைத்த விஜய், திமுக கூட்டணி என்பது கொள்கைக்காக உருவானது அல்ல, அது வெறும் பண பலத்தால் பிணைக்கப்பட்டது என்பதை பொதுமேடையில் போட்டு உடைத்துள்ளார்.

​காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சியின் உண்மையான பலம் தன் பக்கமே இருப்பதாக விஜய் உரிமை கொண்டாடியுள்ளார். “பெயருக்கு அவர்கள் பையில் காங்கிரஸ் இருக்கலாம், ஆனால் உண்மையான காங்கிரஸ் மக்கள் நம்ம பக்கம் தான் நிற்கிறார்கள்” என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய காங்கிரஸ் ஓட்டுக்களை குறிவைத்து விஜய் வீசியிருக்கும் இந்த அஸ்திரம் கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.