தேர்தலுக்காக இப்போதுதான் விஜய் வீதிக்கு வந்திருக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு, தனது அதிரடியான பேச்சின் மூலம் நெல்லை மண்ணில் பதிலடி கொடுத்துள்ளார் விஜய். “நான் கட்சி ஆரம்பித்துவிட்டு இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் போகவில்லை; கடந்த 33 வருடங்களாகக் கடினமாக உழைத்து, ஏற்கனவே ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்ற பிறகுதான் இப்போது கட்சியை ஆரம்பித்திருக்கிறேன்” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
விஜய்யின் இந்தப் பேச்சு, அவர் அரசியலுக்குப் புதியவர் என்று சொல்பவர்களுக்கு ஒரு தகுந்த பதிலாக அமைந்துள்ளது. சினிமாவில் தனது நீண்டகால உழைப்பின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துவிட்டு, அந்தப் பலத்தோடுதான் இப்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளேன் என்பதை அவர் இந்த ஒரு வசனத்தின் மூலம் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.
