வேட்பாளர் தேர்வு குறித்து நிலவி வந்த பல்வேறு விவாதங்களுக்கு நெல்லை தேர்தல் பிரசார மேடையில் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். “நம்ம வேட்பாளர்கள் யாரும் டாட்டாவோ, பிர்லாவோ அல்லது அம்பானியோ கிடையாது; அவர்கள் அனைவரும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள்தான்” என அதிரடி காட்டினார். இதன் மூலம் சாமானிய மக்களுக்கே தனது கட்சியில் முன்னுரிமை என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும், “தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர். வேட்பாளர் வேறு, நான் வேறு கிடையாது” எனக் கூறி, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். இது 50 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ‘அதிசய எலக்சன்’ என அவர் குறிப்பிட்டது, தவெக தொண்டர்களிடையே மிகப்பெரிய எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
