அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் உள் கட்டமைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதன் வாயிலாக பார்வையாளர்களை புதுப்பிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகளை காண, அதற்குரிய பிரத்யேக OTT தளத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் சொசைட்டி எக்ஸ்போவில் OTT இயங்குதளங்கள் பற்றி பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா, “பிரசார் பாரதிக்கு OTT தளத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

2023-24ல் அதனை செய்ய திட்டமிட்டு உள்ளோம். வரும் நிதி ஆண்டில் கிராமப்புறம் மற்றும் எல்லையோர பகுதிகளில் பார்வையாளர்களை விரிவுபடுத்த ரூபாய்.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. அதோடு பார்வையாளர்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் உள்ளிட்ட பிரசார் பாரதியின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது” என்று கூறினார்.