2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். ITR தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி வருடந்தோறும் ஜூலை-31 ஆக இருக்கும். எனினும் கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறை. கடந்த வருடம் ஜூலை 31-ஆக இருந்த கடைசி தேதியை செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(CBDT) 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான புது ITR படிவங்களுக்கான அறிவிப்புகளை  வெளியிட்டு உள்ளது.

புது மதிப்பீட்டு ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்கும். வருடத்திற்கு ரூபாய்.2.5 லட்சம் அடிப்படை விலக்கு வரம்புக்கும் மேல் வருமானமுள்ள இந்தியகுடிமக்கள் ITR தாக்கல் செய்ய வேண்டும். எனினும்  பழைய வரி முறையின் படி 5 லட்சம் ரூபாய் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள குடிமக்கள் வரிசெலுத்த வேண்டியதில்லை. அதேபோன்று புது வரி முறையின் படி 7 லட்சம் ரூபாய் வரி விதிக்கக்கூடிய வருமானமுள்ள குடிமக்கள் வரிசெலுத்த வேண்டியதில்லை..