இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்காக பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக உணவு டெலிவரி செய்தல். ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் வழியில் ருசியான மற்றும் தங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிட வேண்டும் என விருப்பப்பட்டால் தற்போது நீங்கள் வாட்ஸ்அப் வாயிலாக உணவை ஆர்டர் செய்துக்கொள்ளலாம்.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட www.catering.irctc.co.in எனும் இணையதளம் மற்றும் அதன் இ-கேட்டரிங் செயலியான Food on Track வாயிலாக பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்திய ரயில்வேயானது தன் பயணிகளை WhatsApp வாயிலாக ரயில்களில் தங்களுடைய உணவை முன் பதிவு செய்வதற்கு அனுமதிக்கிறது. +91 8750001323 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ரயில்வே அமைச்சகம் வழங்கும் இ-கேட்டரிங் சேவையை பயன்படுத்திக்கொள்ள இயலும்.