மத்திய அரசு சாமானிய மக்களுக்காக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பருவ மலைக்குப் பிறகு பால் விலை குறைவு என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் பால் விலை மூன்று ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பத்து சதவீதம் அதிகரித்த நிலையில் பசுந்தீவனம் விலை குறைந்துள்ளதாகவும் மழைக்காலம் முடிந்து பால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியை அதிகரிக்க தீவிர வானிலையை தாங்கும் வகையிலான இனங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இதன் மூலம் பால் விலை விரைவில் குறைய உள்ளது உறுதியாகி உள்ளது.