விருச்சிக ராசி அன்பர்களே,

இந்த நாள் இல்லத்திலும் உள்ளத்திலும் மன அமைதி குடிகொள்ளும். உங்கள் கூட்டு முயற்சிக்கு மாற்றுக் கருத்து உடையவர்கள் மனம் மாறி உதவுவார்கள். ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதிர்கள்.

கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரக்கூடும். தேவைகள் பூர்த்தியாகும். நிதிநிலை சீராக உள்ளது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று பண விஷயமாக யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகும்.

சுய தேவை பூர்த்தியாகும். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள் .கல்வியில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை  :  வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் :  4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்   : சிவப்பு மற்றும் நீல நிறம்