தனுசு ராசி அன்பர்களே,

இன்று புகழ்ச்சிக்கெல்லாம் மயங்கமாட்டீர்கள். குடும்பத்தின் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் உள்ளது. கொடுக்கல் வாங்கல் சரியாக நடக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டி வரும்.

யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்பட்டு அகலும். அக்கம் பக்கத்தில் அனுசரித்து செல்வது நல்லது. கோபப்பட்டு யாரிடமும் வார்த்தைகளை விட்டு விட வேண்டாம். இன்று பெண்கள் வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்துவீர்கள்.

மனம் சந்தோஷமாக காணப்படும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். விளையாட்டு புத்தியுடன் இருப்பீர்கள். சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்