விருச்சிக ராசி அன்பர்களே,

இன்று எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும். குடும்பத்தாரின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளுங்கள். மறதி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் தயங்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். இந்த நாள் மந்த நிலை ஏற்பட்டது மாறும்.

அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எந்த ஒரு செயலையும் செய்யலாம். யார் மனதையும் புண்படுத்தும் படி பேச வேண்டாம். உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகி செல்லும். இன்று  பெண்களுக்கு அக்கம் பக்கத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தோழிகளிடம் நேரத்தை செலவிடுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் சிரமம் ஏற்படும். முயற்சி எடுத்துப் படித்தால் வெற்றி பெறலாம். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்