விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று மன தடுமாற்றம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக சரியாகிவிடும். மாலை நேரம் மகிழ்ச்சியாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வரவேண்டிய பணம் சரியாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமையை சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு பகை மாறும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். பெரு முயற்சிகளுக்கு பின்னர் சிறிய வெற்றிகள் கிடைக்கலாம். இன்று பெண்களுக்கு மாறுபட்ட தினமாக இருக்கும். சில பணிகள் காலதாமதத்தை கொடுக்கும். மன வருத்தம் ஏற்படலாம். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். குழப்பம் இல்லாமல் இருக்க பாருங்கள். கல்வியில் அக்கறை கொள்ளுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5, 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்