ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளர் சகிப் ஹுசைன், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது தனது வாழ்நாளின் மறக்க முடியாத தருணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான சகிப், வெறும் 15 ரன்களில் கோலியை ஆட்டமிழக்கச் செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த விக்கெட் தனக்கு மிகப்பெரிய கனவு நனவான தருணம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்தத் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய சகிப் ஹுசைன், இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்த அதிரடியான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி போன்ற ஜாம்பவானின் விக்கெட்டை வீழ்த்தியது, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஊக்கம் என்றும் சகிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.