விஜயகாந்த் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை மிஞ்சும் வகையில், விராட் கோலியின் தீவிர ரசிகர்கள் செய்துள்ள ஒரு ‘அப்பாவித்தனமான’ தவறு சமூக வலைதளங்களில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அல்லது மோதல் தொடர்பான ஆத்திரத்தில், ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்த சமூக வலைதளங்களை நாடினர்.
ஆனால், அங்குதான் அந்த கோமாளித்தனமான குழப்பம் நிகழ்ந்தது. கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட்டின் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தேடுவதற்குப் பதிலாக, உலகப்புகழ் பெற்ற அமெரிக்க ராப் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் அதிகாரப்பூர்வ கணக்கிற்குச் சென்று, அவரைத் திட்டி கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.
மேலும் தங்கள் வீரருக்கு ஆதரவாகப் பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு, சம்பந்தமே இல்லாத ஒரு அமெரிக்கப் பாடகரின் பதிவுகளில் கோலி ரசிகர்கள் தெறிக்கவிடும் கமெண்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. “கோலியை ஏன் முறைத்தாய்?”, “நீயெல்லாம் ஒரு பிளேயரா?” என ரசிகர்கள் உருக்கமாகவும், ஆக்ரோஷமாகவும் பதிவிடும் கமெண்டுகளைப் பார்க்கும் நெட்டிசன்கள், “இது ரசிகர்களின் பாசமா அல்லது தொழில்நுட்ப அறிவின்மையா?” என கிண்டல் செய்து வருகின்றனர்.
