இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்றி தென்னாப்பிரிக்க மண்ணில் வரலாறு படைத்தது.

3  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டீம் இந்தியா. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் (108; 114 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஒருநாள் போட்டியில் தனது முதல் சதம் அடித்தார். திலக் வர்மாவும் (52; 77 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைசதத்தை அடித்தார்.

பின்னர்  297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவரில் 218 ரன்களுக்குஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த டோனி டி ஜார்ஜி  (81 ரன்கள்) இந்தப் போட்டியிலும் அபார இன்னிங்ஸ் ஆடினார். மேலும் கேப்டன் எய்டன் மார்க்ரம் 36 ரன்களும், ஹென்றிச் கிளாசன் 21 ரன்களும் எடுத்தனர்.. இந்திய பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. மேலும் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்..

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி, அதன் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன்மூலம் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஒரே 2 இந்திய கேப்டன்கள் தான்.

விராட் கோலிக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை வென்ற 2வது இந்திய கேப்டன் என்ற பெருமையை கே.எல் ராகுல் பெற்றார். தென்னாப்பிரிக்க மண்ணில் இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி பெற்ற 2வது வெற்றி இதுவாகும். முன்னதாக, இந்தியா தென்னாப்பிரிக்காவில் 8 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடியது, அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்திய அணி 2018ல் ஒரு தொடரில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு 9 தொடரில் 2வது தொடரை வென்றுள்ளது டீம் இந்தியா..