இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதே தனது இறுதி இலக்கு என அமெரிக்க கிரிக்கெட் வீரர் ஷயான் ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்..

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதே தனது இறுதி இலக்கு என அமெரிக்க கிரிக்கெட் வீரர் ஷயான் ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ஐகான் விராட் கோலி உலகம் முழுவதும் உள்ள பல வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய பேட்டர் ஷயன் ஜஹாங்கீர் அமெரிக்கா சென்றார்.

அவர் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தகுதிச் சுற்றில் அமெரிக்காவுக்காக விளையாடுகிறார். குரூப் ஏ போட்டியில் ஜஹாங்கீர் சதம் அடித்தார். வலது கை பேட்ஸ்மேன் ஜஹாங்கீர் 70 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

நேபாளம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், அவரால் அமெரிக்காவின் வெற்றியை பெற முடியவில்லை. ஜஹாங்கீர் பாகிஸ்தானில் பிறந்தார். சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, நேபாளத்திற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்..