தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது திமுகவினர் வன்முறையை ஏவிவிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அதிமுகவினர் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், “ஆட்சி முடியப்போகும் நேரத்தில், தோல்வி பயத்தால் விரக்தியின் விளிம்பில் இருக்கும் திமுகவினர் இதுபோன்ற அடாத செயல்களில் ஈடுபடுகின்றனர்” எனச் சாடியுள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவங்களைக் கடுமையாகக் கண்டித்துள்ள எடப்பாடியார், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது காவல்துறை பாரபட்சமின்றி சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
