கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவரும், அவரது இரண்டு மகள்களும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இவர் ஸ்பீடு ரேசர் மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து the good german படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.