திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது bdc ஏவினேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேருவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 வயது முதல் 25 வயது நிரம்பிய பட்டப்படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான பயிற்சி கால அளவு மூன்று மாதமாகும்.

இந்த மூன்று மாத காலமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இந்த பயிற்சிக்கான மொத்த செலவு தொகையாக ரூ..20,000 தாட்கோ மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் AASC மால் அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு  தனியார் விமான நிறுவனங்களான Indigo airlines, Air India, SpiceJet, go first, vistara, போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் தகுதியில்ல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.