ஹைதராபாத்தில் இருந்து சண்டிகர் வந்த இண்டிகோ விமானத்தில் (6E 108), பயணிகள் தரையிறங்கிய பிறகு எதிர்பாராத விதமாக ஒரு பயணியின் மின்னணு சாதனம் (Electronic Equipment) திடீரென தீப்பிடித்தது. இதனால் விமானத்தின் கேபின் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மே 5, 2026 அன்று நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
Emergency evacuation at Chandigarh today on an IndiGo flight after a power bank caught fire. Here is what you need to know as a passenger.
A power bank is not a harmless accessory.
A damaged or overheating lithium battery anytime in flight is a serious fire risk. The DGCA… pic.twitter.com/o8uwcJ5dZk
— Jagriti Chandra (@jagritichandra) May 5, 2026
பாதுகாப்பு கருதி உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக டெர்மினலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. “பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை” என்று தெரிவித்த இண்டிகோ நிறுவனம், இந்த விமானம் முழுமையான சோதனைக்குப் பின்னரே மீண்டும் இயக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. விமான நிலையத்திலேயே நிகழ்ந்த இந்தத் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
