விமானப் பயணத்தின் போது எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லலாம், எதை எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் பயணிகள் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, பாதுகாப்பு விதிமுறைகளின்படி 100 மில்லிலிட்டருக்கு மேற்பட்ட திரவங்களை கைப்பையில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
இந்த நிலையில், விமானத்தில் முழு தேங்காயை எடுத்துச் சென்ற ஒருவர் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் முதலில் அறைக்குள் தேங்காயைக் காட்டுகிறார். பின்னர் அதையே விமானத்திற்குள் எடுத்துச் சென்றிருப்பதும் பதிவாகியுள்ளது.
matrix hack
they won’t let you take through a full water bottle
but they do let you take through full, unopened coconuts
take a wooden stick tool to open them
arrive to your destination hydrated pic.twitter.com/4ZYgCP5R1M
— ⚡️🌞 Sol Brah 🌞🐬 (@SolBrah) December 16, 2025
இதுகுறித்து அவர் விளக்கமளிக்கையில், விமானத்தில் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஆனால், வெட்டப்படாத முழு தேங்காய்களை எடுத்துச் செல்லலாம். பயணத்தின் போது தேங்காயை திறந்து அதிலுள்ள தண்ணீரைக் குடிக்கலாம். இதன் மூலம் முழு பயணத்திலும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் (TSA) விதிகளின்படி, 100 மில்லிலிட்டருக்கு மேல் திரவங்களை கைப்பையில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், அந்த நபர் ஒரு தனித்துவமான வழியாக முழு தேங்காயையே விமானத்தில் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த காணொளியை சமூக ஊடக தளமான X இல் @SolBrah என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. “முழு தண்ணீர் பாட்டிலை விமானத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் திறக்கப்படாத முழு தேங்காயை அனுமதிக்கிறார்கள். அதை திறக்க ஒரு கருவி இருந்தால் போதும். இலக்கை அடையும் வரை நீரேற்றத்துடன் இருக்கலாம்” என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் சுமார் 5 விநாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வித்தியாசமான பயண யுக்தி குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றனர்.
