இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரை இதற்கான தண்டனை இரண்டு ஆண்டுகளாக உள்ளது. மேலும் புதிய சட்டத்தின்படி விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.