தற்போது 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் இந்த மாதம் மக்களுக்கு நிறைய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளும் வர உள்ளது.

ஆதார்:

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் உங்களது விவரங்கள் சரியாக இல்லாமல் இருந்தால் அதனை இனி இலவசமாக திருத்தம் செய்ய முடியாது. இனி ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

வங்கி லாக்கர் ஒப்பந்தம்

இந்த வருடம் முதல் வங்கி லாக்கர் ஒப்பந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இனி ரங்கீலாக்க ஒப்பந்தத்தில் புதிதாக கையெழுத்திட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் வங்கி லாக்கரை பயன்படுத்த இயலாது.

சிம் கார்டு:

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சிம் கார்டு வாங்குவதற்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாகும். அதே சமயம் பயோமெட்ரிக் மூலமும் விவரங்களை சரிபார்க்க வேண்டும் .

டிமேட் கணக்கு நாமினி:

டிமேட் கணக்கு விதிகள் 2024 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டுள்ள நிலையில் இனி நாமினியை கட்டாயம் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை:

கடந்த ஜனவரி 1ஆம் தேதி வணிகரீதியான சிலிண்டர் விலை ஒன்றரை ரூபாய் குறைந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

யுபிஐ கணக்கு:

யுபிஐ வசதியை பயன்படுத்தும் மக்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக upi ஐடி பயன்படுத்தப்படாமல் இருந்தால் அது முடக்கப்படும்.