இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இவ்வாறு முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டு மூலமாக வங்கியின் இருப்பு தொகையை நீங்கள் சரிபார்க்க முடியும். தற்போது எப்படி ஆதார் கார்டை வைத்து வங்கி இருப்பை அறிந்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து  99*99*1#  என்று டயல் செய்து உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் எண்ணை உறுதி செய்வதற்காக மீண்டும் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு UIDAI  இல் இருந்து உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதில் உங்களுடைய வங்கி கணக்கின் விவரங்கள் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.