மதியம் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வானது ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு பொது நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் நிர்வாக துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைபடியை அதிகரித்துள்ளது.

அதாவது 7வது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை பெரும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42% உயர்த்தியுள்ளது. 5 ஆவது ஊதிய விகிதத்தை பெரும் ஊழியர்களின் அகவிலைப்படி 212 சதவீதத்திலிருந்து 221 சதவீதம் ஆகவும், ஆறாவது ஊதிய விகிதத்தை பெரும் ஊழியர்களின் அகவிலைப்படியானது 396 சதவீதத்திலிருந்து 412 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.