சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 15 வரை ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜனவரி 14, 15 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு ஐம்பதாயிரம் ஆகவும், ஸ்பாட் புக்கிங் சேவை பத்தாயிரம் ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஸ்பாட் புக்கிங் சேவையானது வரும் பத்தாம் தேதியோடு நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.