மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம். இது 100 நாள் வேலை திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பளம் இனி அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு மாறுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்த அவகாசம் 2023 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சிக்கல்கள் உள்ள இடங்களில் மட்டுமே மத்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது. நாட்டில் 25.89 கோடி தொழிலாளர்கள் உள்ள நிலையில், 13.48 கோடி பேர் மட்டுமே ஆதார் பதிவை முடித்துள்ளனர்.