விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டது. அதன்படி, களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்; சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்றுமத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகளை நிறுவக்கூடாது.

விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் விழா ஏற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும், பட்டாசு வெடிக்கக்கூடாது. விநாயகர் சதுர்த்தி தொடர்பான விளக்கங்கள் மற்றும் தகவல்களுக்கு 044-28447701 என்ற எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.