தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மனோபாலா. இவருக்கு தற்போது 69 வயது ஆகின்றது. இவர் தாய் மாமன், நட்புக்காக மற்றும் தாஜ்மஹால் உள்ளிட்ட 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைப் போலவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படம், தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் இவரின் நகைச்சுவை மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவாழ் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வளசரவாக்கம் பிருந்தாவனம் மயானத்தில் மறைந்த நடிகர் மனோபாலா உடலுக்கு அவரின் மகன் ஹரிஷ் இறுதி காரியங்களை செய்தார். அவரைத் தொடர்ந்த உற்றார் உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர். பிறகு நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் என வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் அவரின் இறுதி புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.