தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார். நடிகர் மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென அவருடைய இல்லத்தில் மரணம் அடைந்தார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மன்சூர் அலிகான் மதுபானம் நடிகர்களுக்கு எமனாக மாறி வருவதாக எச்சரித்தார். அஞ்சலி செலுத்தியபின் பேசிய அவர், மனோபாலாவின் மறைவு தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றிடமாக மாறியுள்ளது. சமீபகாலமாக திரையுலகில் பலருக்கு எமனாக மதுபானம் இருந்து வருகிறது. மதுவினால் கணையம் கெட்டுவிடுகிறது. முடிந்தவரை மது அருந்துவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.