தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் கோலிவுட் பிரபல நடிகையான திரிஷா பல வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் இணைந்துள்ளார். இதனிடையே திரிஷா இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி லியோ படபிடிப்பு தளத்தில் பேக்கரி ஒன்றில் விஜயும் திரிஷாவும் இணைந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லியோ பட குழுவினர் திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.தற்போது சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் லியோ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.