பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சன்குரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியின் விடுதி உணவகத்தில் உணவருந்திய 74 மாணவர்கள் வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதி உணவு பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார்.

74 பேரில் 14 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீதம் நான்கு மாணவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். உணவு தரம் குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.