தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி அஜார் பைஜான் நாட்டில் நடைபெற்று வருகின்றது.

இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒன்று இளமையான தோற்றம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.