லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த  திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தியேட்டர்களில் புக்கிங் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அக். 15ஆம் தேதி தமிழகத்தில் புக்கிங் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் முதல் நாளில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.