தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்டது. இது புதுச்சேரி அருகே நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வழுவிழந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் தற்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைவிடாது பெய்து வருகிறது. மேலும் இதன் காரணமாக நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கியுள்ளார். மேலும் இதே போன்று புதுச்சேரியிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
