கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் செவிலியர்கள் பயிற்சி செயலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் செவிலியர் கழிப்பறைக்கு சென்றார். அவர் சுத்தம் செய்யும் பிரஷ்ஷில் ரப்பர் பேண்ட் சுத்தப்பட்ட நிலையில் ரகசிய பேனா கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது மருத்துவர் மாரிமுத்து, பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் கழிப்பறைக்கு சென்று பார்த்து ரகசிய கேமராவை பார்த்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்க்கும் வெங்கடேஷ் என்பவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அமேசான் ஆன்லைன் செயலியில் ரகசிய பேனா கேமராவை வாங்கியுள்ளார். அதன் பிறகு அதனை கழிவறை சுத்தம் செய்யும் ரசில் பொருத்தி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த மொபைல் போன் கேமரா மெமரி கார்டு ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.