தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். படம் பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி இருக்கிறார் விஜய் .கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் சூட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சினிமாவில் இருந்து விஜய் விலக இருப்பதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் விஜய்யின் குட்டி ரசிகையான ஒரு குழந்தை அழுகும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது .அந்த வீடியோவில் அந்த குழந்தையிடம் விஜய் இன்னும் இரண்டு படங்கள் மட்டும் தான் நடிப்பதாகவும் பிறகு நடிப்பை நிறுத்தி விட முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் அந்த குழந்தை விஜய் மாமா இனி நடிக்க மாட்டாரா? என்று கதறி அழுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.