2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு, திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்யில் னை இன்று (செப்.14) செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “விஜய் அரசு மீது விமர்சனம் செய்வதை விட, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சி அதனைவிட மேலாக 11.19% ஆக உள்ளது. இது அரசு செயல்பாடுகளின் வெற்றி எனும் சான்றாகும். மக்களுக்கு எது நன்மை செய்திருக்கிறது என்பதையும், அரசின் பணிகளை மக்களே நன்கு புரிந்து கொள்கிறார்கள்” என்றார். தமிழக அரசு செயல்பாடுகள் குறித்து படித்து தெரிந்துகொள்வது விஜய்க்கு நல்லது எனவும் அவர் எச்சரிக்கை தெரிவித்தார்.