தமிழகத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு அரசுத் தரப்பில் விரிவான நலத்திட்டமாக “அன்புக் கரங்கள்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 15) அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, பெற்றோர் இல்லாத 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, அவர்களின் கல்வி, பாடப்புத்தகம், பள்ளிக்கூட கட்டணம், உடைகள், தேர்வு கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளும் அரசால் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி, சமூகத்தில் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கு உளவள மற்றும் பொருளாதார ஆதரவாக அமையும் வகையில் அமைந்துள்ளது.
