தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சாந்தனு ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக சாந்தனு நிறைய பேட்டிகள் கொடுத்திருப்பார். ஆனால் படத்தில் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே சாந்தனு காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆன பிறகு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் தனது காட்சிகள் அதிகமாக இடம்பெறவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் ஷாந்தனு.

பார்கவ் எனும் கதாபாத்திரம் படத்தில் 30 நிமிடங்கள் வரை வரும். எனக்கென காதல் பாடல், சண்டைக்காட்சி போன்றவை படமாக்கப்பட்டது. ஆனால், அவை படத்தில் இடம்பெறவில்லை. ‘விஜய்ணா படத்துல நடிச்ச பிறகு வாழ்க்கை மாறும்னு நினைச்சேன், ஆனா படம் வெளியாகி அவமானம்தான் ஏற்பட்டுச்சி’ என்றுள்ளார்.