தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிம்பு, ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சாய்ஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இப்படம் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் பெரும் வெற்றியடைந்ததாக கூறி சிம்பு தனது ரசிகர்களுக்கு சமீபத்தில் விருந்து வைத்தார். இந்நிலையில், ஏப்ரல் 27ல் அமேசான் ப்ரைமில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.