நடிகர் விமல் நடிப்பில் நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவணன் சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி. இந்த படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விமல் வராததை கண்டித்து இயக்குனர் அமீர் பேசினார். தொடர்ந்து விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டுக் கொடுக்காததால் புறக்கணித்து விட்டதாகவும் தகவல் பரவியது இந்த நிலையில்

இந்நிலையில் இதற்கு விமல் விளக்கமளித்துள்ளார். படத்தின் நிகழ்ச்சிக்கு வர நான் பணம் கேட்டேன் என்பது தவறான தகவல். அதே தேதியில் எனது தெய்வ மச்சான் படத்தின் நிகழ்வும் இருந்தது. அவர்கள் 1 மாதத்திற்கு முன்பே தேதியை சொன்னார்கள். 2 நிகழ்வும் ஒரே நாளில் வைத்ததால் குலசாமி பட நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்றுள்ளார்.