கரூரில் நடைபெற்ற நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகளுக்கு நடிகர் விஜய்தான் முதன்மையான காரணி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் கரூருக்குச் செல்லவில்லை என்றால் அங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்காது என்றும், கூட்டம் இல்லை என்றால் நெரிசலோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் தெரியாமல் நடந்துவிட்டது என்றும், இதற்குத் தானும் ஒரு வகையில் பொறுப்பேற்பதாகவும் மக்களிடம் விஜய் தனது வருத்தத்தைத் தெரிவித்தால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்றும் சீமான் அந்தப் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
