நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆவதை டெல்லி மேலிடம் சற்றும் விரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவிற்கு பலமே இல்லை என்றாலும், ஆளுநர் வழியாக அழுத்தம் கொடுத்து விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என அவர் விளாசியுள்ளார்.

​பாஜகவின் இந்த மறைமுக அரசியல் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். ஆளுநர் மாளிகை பாஜகவின் அழுத்தத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் இந்தத் தகவல், தற்போது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.