தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “திரையில் ஊழல் அரசியல்வாதிகளை வீழ்த்திய விஜய், இப்போது நிஜ வாழ்விலும் மக்கள் நலனுக்காகப் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார். தமிழக மக்களின் ‘ஒரு விரல் புரட்சி’ புதிய வரலாற்றைப் படைக்கக் காத்திருக்கிறது” எனப் புகழ்ந்துள்ளார்.

​மேலும், மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இடையிலான உறவை மேம்படுத்த முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றத் தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநில முதலமைச்சருக்கு, ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு வெளிப்படையாக வாழ்த்துத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.