தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியில், அவரை எதிர்த்து திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மீண்டும் களம் காண்கிறார்.

“தளபதியையே நேருக்கு நேர் எதிர்க்கிறாரே… அப்போ மேட்டர் பெருசுதான்!” என திருச்சி அரசியல் வட்டாரத்தில் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. விஜய்யைப் போன்ற ஒரு மாஸ் தலைவரைத் தனது தொகுதியில் வீழ்த்தினால், இனிகோ இருதயராஜுக்குச் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்கலாம் என அரசியல் மேடைகளில் பலத்த பேச்சு அடிபடுகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அப்போ இந்தத் தடவை திருச்சி கிழக்குல நடக்கிறது வெறும் தேர்தல் இல்ல, அமைச்சராகறதுக்கான அக்னிப் பரீட்சை!” என கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். விஜய்யின் அரசியல் என்ட்ரி மற்றும் இனிகோ இருதயராஜின் மந்திரி கனவு என திருச்சி கிழக்கு தொகுதி இப்போது தமிழகத்தின் ‘ஹாட் சீட்’ ஆக மாறியுள்ளது.