தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். இதில் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராகச் சபரிநாதன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடைய தந்தை ராஜேந்திரன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யிடம் மிகவும் விசுவாசமாகப் பணியாற்றி வருபவர்.
அந்த நீண்ட கால அன்பிற்கும், உழைப்பிற்கும் மதிப்பளிக்கும் விதமாகவே, அவரது மகனுக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். “உழைச்சவனுக்கு என்னைக்குமே உயர்வுதான்… தளபதி அதை நிரூபிச்சுட்டாரு!” எனத் தொண்டர்கள் நெகிழ்ச்சியில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.
வேட்பாளர் அறிமுக மேடைக்குத் தனது தந்தையுடன் சென்ற சபரிநாதன், விஜய்யைச் சந்தித்தபோது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். தனது தந்தையின் இத்தனை ஆண்டுகால விசுவாசத்திற்கு அங்கீகாரம் கிடைத்த அந்தத் தருணம், அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது வெறும் அரசியல் சீட் இல்ல… ஒரு குடும்பத்தின் 30 ஆண்டு கால உழைப்புக்கான மரியாதை!” எனச் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். விருகம்பாக்கம் தேர்தல் களத்தில் சபரிநாதனின் இந்த ‘பாசப் போராட்டம்’ ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
