தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜய் தாய் ஷோபா சமீபத்தில் பேட்டி ஒன்றில், மகன் விஜய்யின் பிட்னஸ் ரகசியம் குறித்து கூறியுள்ளார். அதாவது விஜயின் பிட்னஸ் ரகசியம் தோசை தானம்.

காலையில் இரண்டு தோசை, இரவில் இரண்டு தோசை எடுத்துக்கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்வதனால் தான் விஜய் இந்த வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் தோசை தான் விஜயின் பிட்னஸ் ரகசியமா என்று வாயடைத்து போய் உள்ளனர்.